இலங்கை

அமைச்சரவைக் கூட்டத்தினை கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

இதன் பிரகாரம், எதிர்வரும் 18ஆம் திகதி அடுத்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரித்துவரும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளைக் கைவிடவில்லை எனில், அமைச்சரவைக் கூட்டத்தினை கூட்டப்போவதில்லை என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இதன்பிரகாரம், நேற்று புதன்கிழமை நடைபெறவேண்டிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றிருக்கவில்லை. இதனையடுத்து, அரசாங்கம் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.