இலங்கை
Typography

‘அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின்படி நீங்கள் நினைத்தபடி அமைச்சர்களை நியமிக்க முடியாது. அரசியலமைப்பை மீறி தவறை செய்திருக்கிறீர்கள்.’ என்று சுட்டிக்காட்டி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். 

“அமைச்சர் ஒருவர் பதவி விலகினால், அடுத்த அமைச்சர் ஒருவரை நியமிக்க பிரதமரின் ஆலோசனை பெறப்பட வேண்டும். அத்துடன் பிரதமர் அனுப்பும் அமைச்சர் பெயர்களை பரிசீலிக்க வேண்டும். 19வது திருத்தும் இதனை தெளிவாக சொல்கிறது . ஆனால் எடுத்தபடி பதில் அமைச்சர்களை நீங்கள் நியமித்திருப்பது தவறானது. உங்களின் இந்த நடவடிக்கை தொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படலாம்.” என்றும் பிரதமரின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்