இலங்கை

“எமது பாதுகாப்பை நாங்கள் தான் உறுதிப்படுத்த வேண்டும். பொலிஸோ, இராணுவமோ பாடசாலை வாசலில் நிற்பது பாதுகாப்பை முழுமையான உறுதிப்படுத்தாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

வவுனியா சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

செல்வம் அடைக்கலநாதன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நாங்கள் எத்தனையோ போராட்டங்களை பார்த்தவர்கள். எங்களுடைய போராட்டம் என்பது இனரீதியான போராட்டமாகத்தான் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று போராட்டம் என்ற ரீதியிலே மிகவும் பயங்கரமான ஒரு பயங்கரவாத நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த உலகம் முழுதும் தங்களுக்கு வர வேண்டும். தங்களுடைய நாடாக மாற வேண்டும் என்ற சிந்தனையிலே செயற்படுகின்ற ஒரு நிகழ்வாக நாங்கள் அயல் நாடுகளிலே பார்த்திருக்கின்றோம். இப்பொழுது எங்களுடைய நாட்டிலே அது உருவெடுத்திருக்கிறது. ஆகவே மக்களுடைய எண்ணிக்கை அதுவும் கூடுதலாக இந்த சம்பவங்களை வைத்து பார்க்கும் போது தமிழர்கள் தான் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

மக்களுடைய பிணங்களை எண்ணி கணக்குப் பார்த்து சந்தோசப்படுகின்றது தான் இந்த தீவிரவாதத்தின் எண்ணம். ஆகவே நாங்கள் எங்களுடைய பாதுகாப்பை நாங்கள் தான் பார்க்க வேண்டும். அந்த விடயத்திலே நாங்கள் எல்லோரும் கவனமாக போகும் வழிகளில் பிள்ளைகளை, எல்லோரையும் கவனமாக நாங்கள் தான் பார்க்க வேண்டும்.

இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்கின்ற நாங்கள் இவ்வளவு இழப்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு நாங்கள் இந்த வாழ்க்கையை நடத்துகிறோம் என்றால் எங்கள் கடவுள் ஏதோ ஒரு வகையில் எங்களை விட்டிருக்கிறார் என்று சொன்னால் நாங்கள் நல்லதை செய்ய வேண்டும் என்பதற்காகவே.

எங்களுடைய இலட்சிய போராட்டம் என்பது, அதற்கான எல்லைகள் என்பது அல்லது கவனம் என்பது இன்றைக்கு பார்த்தவர்கள் இருந்தால் எவ்வளவு பிரச்சனை. ஆகவே சமூக ஒற்றுமை என்பது கட்டாயம் தேவை. எங்களுடைய மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.

ஆகவே பாதுகாப்பை நீங்கள் உறுதிப்படுத்துகின்ற செயற்பாட்டிலேயே அது பொலிஸ் பார்த்துக்கொள்ளும், இராணுவம் பார்த்துக்கொள்ளும் எங்களை சோதனை செய்யும்போது அது ஒரு விருப்பம் இல்லாமல் இருக்கின்ற ஒரு சூழல். ஆனால் எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்கின்ற ஒரு கட்டாய நிலைக்கு நாங்கள் வந்திருக்கின்றோம்.

ஆகவே எங்களுடைய தேசத்திலே இன்றைக்கு பல பிரச்சனைகளை எங்களுடைய தமிழ் சமூகம் சந்தித்திருக்கிறது. இவ்வாறானவைகளிலிருந்து மீண்டு நாங்கள் எங்களுடைய செயற்பாட்டை செய்ய வேண்டும்.” என்றுள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவை கைப்பற்றப்போவதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் லாக்டவுன் தாக்கத்துடன் ஏற்கனவே போராடிக்கொண்டு இருக்கும் விவசாயிகளின் நிலங்களை பெரும் அளவிலான வெட்டுக்கிளிகள் அழித்துவருகின்றன.

நாடு தழுவிய பொதுமுடக்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே மத்தியில் ஆளும் பாஜக அரசு திரைமறைவில் பல்வேறு மக்கள் விரோதத் திட்டங்களை அரங்கேற்றி வருகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :

இந்திய சீன எல்லையான லடாக்கில் மேலும் ஆயிரக் கணக்கான வீரர்களைக் குவித்தும், போர் விமானங்களைத் தரித்தும் வருவதால் சீனா இந்தியா இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.