இலங்கை

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமல்ல யாராக இருந்தாலும் அமைச்சரவையைக் கூட்டாதது தவறுதான். ஆனால், அதற்காக உரிய நேரத்தில் கடமைகளை செய்திருக்க வேண்டிய அரச அதிகாரிகள் ஜனாதிபதி மீது மாத்திரம் பழி சுமத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.” என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

துமிந்த திசாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமனத்தில் தலையிடாவிட்டாலும் அதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அறிந்து கொள்வதற்கும், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதிலும் மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். அதற்காக புலனாய்வு தகவல்களை ஊடகங்களில் வெளிப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தீயை மூட்டிவிட்டு தற்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தெரிவுக்குழுவின் செயற்பாடுகளால் அமைச்சரவை கூடாமல் இருப்பது மக்களையே பாதிக்கும். எனவே பிரதமரும், ஜனாதிபதியும் சுமூகமான கலந்துரையாடலின் மூலம் அமைச்சரவை தொடர்பான சர்ச்சைக்கு முடிவு காண வேண்டும்.” என்றுள்ளார்.

“விமர்சனங்கள் எல்லாவற்றுக்கும் நாம் பதிலளித்துக்கொண்டிருக்க முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒற்றுமை மிக அவசியம். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள எம்.ஏசுமந்திரனின் சிங்கள நேர்காணல் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி ஆராயும்.” என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

“நாம் மிகவும் மதிக்கும் ஒரே சொத்து மனித அபிவிருத்தி என்பதால் எத்தகைய சிரமங்களை நாம் எதிர்கொண்டாலும் ´மக்களே முதன்மையானவர்கள்´ என்ற எமது கொள்கையில் சமரசம் செய்ய முடியாது” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

புலம்பெயர் தொழிலாளர்களின் அவலங்களுக்காக இணையவழியில் போராட்டம் நடத்துவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்  திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக மத்திய அரசு அறிவித்திருந்த ஊரடங்கு உத்தரவினால் கொரோனா வைரஸ் சமூகத் தொற்று குறைந்தது எனக் கூறப்பட்டாலும், மிகப்பெரிய சமூகப் பிரச்சனையாக எழுந்தது புலம் பெயர் தொழிலாளர்களின், சொந்தமாநிலங்களுக்கான நகர்வுகள்.

இத்தாலியின் வடக்கு பிராந்தியங்களான லோம்பார்டி, லிகுரியா மற்றும் பீட்மோண்ட் ஆகியவற்றில் ஜூன் 3 ஆம் தேதி பயணக் கட்டுப்பாடுகளை பாதுகாப்பாக அகற்றத் தயாராக இல்லை என்று இத்தாலியின் குழுமத்திற்கான சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட மருத்துவத்தின் புதிய ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் மேற்பகுதியில் ஆர்க்டிக் துருவத்துக்கு கீழே அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய சைபீரிய சமவெளி மற்றும் அதன் காடுகளில் முக்கியமாக கட்டாங்கா என்ற பகுதியில் மிகவும் தீவிரமாக கடந்த சில நாட்களாகக் காட்டுத் தீ பரவி வருகின்றது.