இலங்கை
Typography

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர், அதனை மேற்கொண்ட பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

தஜிகிஸ்தானில் நடைபெறும் ஆசிய சர்வதேச செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கை தொடர்பான ஐந்தாவது மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளதாவது, “பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் வலிமை இலங்கை அரசாங்கத்திற்கும், இராணுவத்திற்கும் இருக்கின்றது. பிராந்தியத்தில் சமாதானம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அனைவரும் புரிந்துணர்வுடன் அர்ப்பணிக்க வேண்டும். சமாதானம் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் எதிர்வரும் நூற்றாண்டுக்குள் ஆசியா வலுவடைய வேண்டும். ஆசியாவின் அதிகாரத்தை அடிமைப்படுத்துவதற்கு எந்தவொரு வெளிசக்திக்கும் அனுமதிக்கக் கூடாது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS