இலங்கை
Typography

இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு வருமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். 

தஜிகிஸ்தானில் இடம்பெற்ற ஆசியாவின் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின் ஐந்தாவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு இடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.

இலங்கைக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்தும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சில பொருட்கள் மீது அமெரிக்காவினால் வர்த்தக தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், எதிர்காலத்தில் அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தலைவர்கள் கலந்துரையாடினர்.

அத்தோடு, மிக விரைவில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS