இலங்கை
Typography

“நாட்டிலுள்ள அரசியல்வாதிகளில் 90 வீதமானவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு தகுதியற்றவர்கள். அவர்கள்தான், அதிகமாக தீய செயல்களில் ஈடுபடுகின்றனர்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இவ்வாறான தீய அரசியல்வாதிகளுடன் இணைந்து அரச திணைக்களங்களில் பணியாற்றும் அரச அதிகாரிகளும் தீய வழியில் செல்கின்றனர். அரச அதிகாரிகளிலும் நூற்றுக்கு 10 வீதமானவர்களே ஒழுக்கமானவர்களாக உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வாக்குகளை மாத்திரமே இலக்காகக் கொண்டு செயற்படும் அரசியல்வாதிகளுக்கு நாட்டைப்பற்றி சிறிதளவும் அக்கறை இல்லை. இந்த நாட்டில் எந்த அரசாங்கம் ஆட்சி அமைத்தாலும் போதைப் பொருள் பாவனையை ஒரு போதும் கட்டுப்படுத்த முடியாது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்