இலங்கை
Typography

நாட்டை சிறப்பான முறையில் கட்டியெழுப்ப வேண்டுமாயின், அரசியலமைப்பிலிருந்து 18 மற்றும் 19வது திருத்தங்களை இரத்து செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 18வது திருத்தம் சர்வாதிகாரத்திற்கு வழிகோலியதாகத் தெரிவித்த ஜனாதிபதி, 19வது திருத்தத்தின் ஊடாக, நாடு ஸ்திரத்தன்மையை இழந்ததாகவும் கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்