இலங்கை
Typography

‘ஒரு நாட்டில் அனைவருக்கும் பொதுவான சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும். அதைவிடுத்து, ஒருவருக்கு ஒரு சட்டமும் மற்றொருவருக்கு இன்னொரு சட்டமும் அமுல்படுத்த முடியாது’ என்று பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

நாத்தான்டியப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஞானசார தேரர் மேலும் கூறியுள்ளதாவது, “நாங்கள் பலவந்தமாக அடிபணிய வேண்டுமா? ஆட்சியாளர்கள் அமைதியானதற்கு நாங்கள் அமைதியாகப் போவதில்லை. ஒரு ஒப்பந்தத்தின் காரணமான மாலைத்தீவின் அனைத்து தீவுகளும் கட்டாரின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. கட்டார் என்பது உலகலாளவிய ரீதியில் வஹாபிசத்தை பரப்புவதற்காக பணத்தை வாரி வழங்கும் ஒரு நாடு. அவ்வாறான அடிமையாகும் நிலை எமக்கு வர வேண்டாம்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்