இலங்கை
Typography

“தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமான சி.வி.விக்னேஸ்வரனின் கீழ்த்தரமான வார்த்தைகளுக்கு நாங்கள் காது கொடுப்பவில்லை.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

“அரசாங்கத்தின் வாக்குறுதிகளை எமது மக்கள் முன்னிலையில் சென்று கூறுவது மாமா வேலை அல்ல. விக்னேஸ்வரனின் கீழ்த்தரமான வார்த்தை பிரயோகங்களுக்கு கூட்டமைப்பு செவிகொடுக்காது. விக்னேஸ்வரன் தனது அரசியல் சுயலாபங்களுக்காக எந்தளவு கீழ்மட்டத்தில் வீழ்ந்துள்ளார் என்பது நன்றாக வெளிப்பட்டுள்ளது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேசசபை விவாகரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு மாமா வேலை செய்கின்றது என சி.வி.விக்னேஸ்வரன் பகிரங்கமாக தெரிவித்துள்ள நிலையில், அதற்கு பதில் கூறும் வகையில் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க கூட்டமைப்பு எப்போதுமே முன்னின்று செயற்பட்டு வருகின்றது. இன்றுவரை வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் பெற்றுக் கொண்டுள்ள தமது உரிமைகளுக்கு எமது தலையீடுகள் பிரதான காரணம் என்பதை மறந்துவிட கூடாது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்