இலங்கை
Typography

எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக தேர்தல்கள் நடைபெறவுள்ளதால், பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பாராளுமன்ற கட்டட வாளாகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மஹிந்த தேசப்பிரியவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே பிரதமர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

“மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமையானது, அரசியலமைப்பு மீறலாகும். தொடர்ந்தும் தேர்தலை காலதாமதப்படுத்துவதானது, அதிகார பரவலாக்கத்தையும் கேள்விக்குட்படுத்துவதோடு, மாகாண சபை முறைமையினை அரசியலமைப்பிலிருந்து நீக்குவதற்கான கோரிக்கையையும் மேலெழச்செய்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும்.” அவ்வாறு நடத்தப்படாத பட்சத்தில் அதற்கான பொறுப்பினை ஏற்று ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகுவவதாக மஹிந்த தேசப்பிரிய அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த வேண்டுகோளை அவரிடம் விடுத்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்