இலங்கை

நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத்தை தோற்கடிப்பதற்காக மகாசங்கத்தினர் ஒன்றுபட வேண்டும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

தேசிய புத்திஜீவிகள் பிக்கு அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஞானசார தேரர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்த நாட்டில் பாரம்பரிய மற்றும் நடுத்தர முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர். எனினும் அவர்களுக்கு இந்த வஹாப் வாதம் குறித்து தெரியாது. இந்த நாட்டுக்கு ஒரேயொரு மாற்று வழியே உள்ளது, அது சிங்களத் தலைவர் ஒருவரையும் சிங்கள அரசாங்கம் ஒன்றையும் நியமிப்பதாகும். சிங்கள அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாவிட்டால் இந்த துறவு வாழ்க்கையில் அர்த்தமில்லை.” என்றுள்ளார்.