இலங்கை

அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணை 27 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. 

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு, பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) இடம்பெற்றது. பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் கிடைத்தன.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகள் வாக்களித்தன. பிரேரணைக்கு எதிராக ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் வாக்களித்தன.