இலங்கை
Typography

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் அமையவுள்ள புதிய கூட்டணியில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணையும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

“எதிரணியால் எத்தகைய கூட்டணி அமைக்கப்பட்டாலும், அது எமது புதிய கூட்டணிக்கு சவாலாக அமையாது. எமது புதிய கூட்டணி ஆகஸ்ட் 05ஆம் திகதி அமையும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நாட்டின் சகல இன, மத மக்களதும் தனித்துவத்தையும் உரிமையையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் வகையிலேயே இந்த விரிவான புதிய கூட்டணி அமைகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இந்த புதிய கூட்டணியில் இணையும். நாட்டில் இன, மத ஒற்றுமையை விரும்பும் சகலரும் இதற்கு ஆதரவாக உள்ளனர்.

கூட்டு எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலக்காகக் கொண்டு அமைப்பதாகக் கூறும் கூட்டணியானது ஓர் இனம், ஒரு மதம் சார்ந்ததாகவே அமையும். நாட்டில் பெரும்பாலான சிங்கள பௌத்த மக்களே அத்தகைய ஒரு கூட்டணியை ஏற்கமாட்டார்கள்.

நல்ல பௌத்தர்கள் பரந்த சிந்தனையுடையவர்கள். அவர்கள் கூட அதற்கு ஆதரவளிக்க மாட்டார்கள் என்பதால் நாட்டில் அனைத்து மக்களினதும் ஆதரவு எமது புதிய கூட்டணிக்கே கிடைப்பது உறுதி.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நாட்டில் இடம்பெற்ற அரசியல் சூழ்ச்சியின் போதே ஐ.தே.க.விலுள்ள தலைவர்கள் ஒன்றிணைந்து விரிவான கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் தீர்மானம் எடுத்தனர்.

அதற்கமைய சகல இன, மதத்தினரும் ஏற்றுக்கொள்ளும் முக்கிய விடயங்களை உள்ளடக்கி யாப்பு ஒனறும் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் பிரதான கட்சியாக ஐ.தே.கட்சி இருந்துகொண்டு அதற்கு பகுதிகளை இணைத்துக் கொள்வதற்காக சேர்க்கப்பட்ட கூட்டணிகளே இருந்தன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அது போன்ற கூட்டணிகளையே அமைத்து செயற்பட்டுள்ளன.

இம்முறை அவ்வாறில்லாமல் அனைத்துக் கட்டசிகளுக்கும் சுதந்திரமும், உரிமையும், நீதியும் கிட்டும் வகையில் புதிய கூட்டணி அமையும். இந்த வருடத்தின் நடுப்பகுதியிலேயே இந்தக் கூட்டணியை அமைக்க நாம் தீர்மானித்தோம் எனினும் சிலர் தேர்தலுக்கு அண்மித்த காலத்தில் கூட்டணியை அமைக்கலாம் எனத் தெரிவித்த யோசனைக்கு இணங்க ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதி காலை 10 மணிக்கு சுகததாச விளையாட்ட ரங்கில் சுமார் 10.000 மக்கள் மத்தியில் அதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்படும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்