இலங்கை
Typography

முஸ்லிம் மக்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை முற்றாக ஓரங்கட்ட வேண்டும் என்று பேராயர் கர்த்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். 

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு சுயாதீனமான உறுப்பினர்களைக் கொண்ட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும். ஏனெனில் இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் மீதோ அவற்றினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மீதோ எவ்வித நம்பிக்கையும் எமக்கு இல்லை. அத்துடன் இஸ்லாத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை திரிவுபடுத்தி அடிப்படைவாதத்தில் ஈடுப்படுபவர்களை முஸ்லிம்கள் அவர்களது சமூகத்திலிருந்து முற்றாக ஒதுக்கி விடுங்கள்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் மூன்று மாத பூர்த்தியடைந்துள்ளதை முன்னிட்டு கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் இடம்பெற்ற விஷேட ஆராதனையில் உரையாற்றும் போதே பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்