இலங்கை
Typography

திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் விகாரை அமைப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்றம் சற்றுமுன்னர் (இன்று திங்கட்கிழமை) உத்தரவிட்டுள்ளது. 

அத்தோடு, கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் மற்றும் மாரியம்மன் ஆலயம் ஆகியவற்றுக்கு பக்தர்கள் சென்று வழிபடுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவையும் நீக்கி மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கன்னியா பிள்ளையார் ஆலயத்தை இடித்து, அந்தப் பகுதியில் விகாரை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அதனை, எதிர்த்து காணி உரிமையாளர் பெண்மணி தொடர்ந்த வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகி வாதாடினார்.

வழக்கு விசாரணைகள், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்