இலங்கை
Typography

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அக்கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நேற்று இரவு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், ஐக்கிய தேசியக் கட்சி இதனை உறுதி செய்து தகவல் எதனையும் வெளியிடவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக்கூட்டம் நேற்று திங்கட்கிழமை மாலை அலரி மாளிகையில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தால் கூட்டத்தில் அமளி ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும் கரு ஜயசூரியவுக்கு ஆதரவாக மற்றொரு பிரிவினரும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக இன்னொரு பிரிவினரும் கருத்து வெளியிட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து கடும் வாக்குவாதங்களின் பின்னர் எந்த முடிவுகளுமின்றி நேற்று மாலை கூட்டம் முடிவடைந்தது. எனினும், சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான முடிவொன்று உயர்பீடத்தினால் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்