இலங்கை
Typography

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதியான தேவதாசனின் உண்ணாவிரதம் சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

இன்னும் இரண்டு வாரங்களில் தீர்வினை பெற்றுத்தருவதாக அமைச்சர் மனோ கணேசன், நேரில் சந்தித்து உறுதிமொழி வழங்கியதை அடுத்து, அவர் நீராகாரம் அருந்தி உண்ணாவிரதத்தை நிறைவு செய்து கொண்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதியான கணகசபை தேவதாசன் கடந்த சில தினங்களாக புதிய மகசின் சிறைச்சாலைக்குள் சாகும் வரையான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார்.

நீண்ட காலமான சிறை வைக்கப்பட்டுள்ள தனக்கு பிணை வழங்குமாறு கோரி அவர் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்