இலங்கை
Typography

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிகழும் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்யும் சச்சரவுகளினால், அந்தக் கட்சியின் மானம் காற்றில் பறப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவா அல்லது கரு ஜயசூரியவா என ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீடம் திண்டாடுகின்றது. இதனால், எமது வேட்பாளர் இலகுவாக வெற்றிபெறுவார்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, "ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தால் ஐக்கிய தேசியக் கட்சியின் மானம் காற்றில் பறக்கின்றது. ரணில் விக்ரமசிங்க - சஜித் பிரேமதாச - கரு ஜயசூரிய என மூவருக்கிடையில் அரங்கேற இருந்த சமர் தற்போது சஜித் - கரு என இருவருக்கிடையில் மூண்டுள்ளது. இதனால் எவரை வேட்பாளராகக் களமிறக்குவது என ஐ.தே.கவின் உயர்பீடம் திண்டாடுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் படுதோல்வியடையப் போகின்ற ஐ.தே.க., வேட்பாளர் விடயத்தில் நடுவீதியில் வந்து மோதுவதைப் பார்க்கும்போது சிரிப்புத்தான் வருகின்றது. சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப ஐ.தே.க. என்னதான் ஆட்டம் போட்டாலும் எமது அணியில் களமிறங்கும் வேட்பாளர்தான் வெற்றியடைவார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது அணி வெற்றியடைவது உறுதி." என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்