இலங்கை
Typography

“ஜனநாயகத்தை மதிக்கும், கொலை குற்றச்சாட்டுக்களுடன் தொடர்பில்லாத ஒருவரை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கினால், நிச்சயம் ஆதரவு வழங்குவேன்.” என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான குமார வெல்கம தெரிவித்துள்ளார். 

“ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியிற்கு ஆதரவாக செயற்பட மாட்டேன். சுதந்திரக் கட்சிக்கே என்றும் விசுவாகமாக செயற்படுவேன்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஒருபோதும் எதிராக செயற்பட மாட்டேன் எனத் தெரிவித்த குமார வெல்கம, அரசியல் ரீதியில் தற்போது அவர் மேற்கொண்ட தீர்மானங்களே தவறானதாக உள்ளதுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை பாதுகாக்கும் பொறுப்பு அவருக்கு காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், “மஹிந்த ராஜபக்ஷவிற்கும் எனக்கும் எவ்வித தனிப்பட்ட பிரச்சினைகளும், அரசியல் பிரச்சினைகளும் கிடையாது. ஆனால் ஒரு தரப்பினர் பிரச்சினைகளை ஏற்படுத்தி விட்டு நன்மதிப்பினை பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றார்கள்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்