இலங்கை
Typography

ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையே எதிர்த்து வெற்றியடையக் கூடிய ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி களமிறக்கும் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

கண்டியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஏனைய கட்சிகளைப் போன்று ஐக்கிய தேசியக் கட்சியும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அந்தவகையில் எதிரணியினர் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையே களமிறக்க உள்ளனர். அவ்வாறாயின் அவருடன் போட்டியிட்டு வெற்றியிடக்கூடிய ஒருவரையே நியமிக்க வேண்டும்.

இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லாத காரணத்தினால் தடுமாறி விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் பகல் நேரத்தில் அவ்வாறு போய் விழுவோமாக இருந்தால் நாம் முட்டாள்களாக இருக்க வேண்டும். ஆகையால் கோட்டாவை எதிர்த்து போட்டியிடக்கூடிய மக்கள் செல்வாக்கு நிறைந்த ஒருவரையே ஐக்கிய தேசியக்கட்சி நிச்சயம் களமிறக்கும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்