இலங்கை
Typography

வடக்கு மாகாண சபையின் மீன்பிடி, போக்குவரத்து அமைச்சராகக் கடமையாற்றிய பா.டெனீஸ்வரனை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு, வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் எடுத்த தீர்மானமானது அரசியலமைப்புக்கு முரணானது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது. 

நீதிபதிகளான மஹிந்த சமயவர்தன, பிரியந்த பெர்ணான்டோ ஆகிய நீதிபதிகள் குழாமால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, டெனீஸ்வரனுக்கு பதிலாக, முன்னாள் முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட நியமனமும் சட்டவிரோதமானதென தெரிவித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவ்வாறான நியமனங்களை வழங்குவதற்கு, முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. அத்தோடு, பா.டெனீஸ்வரனின் வழக்கு செலவுகளை சி.வி.விக்னேஸ்வரன் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்