இலங்கை
Typography

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது. தொடர்ந்து 25 நாட்கள் திருவிழா நடைபெறும். 

இதனிடையே, பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, பக்த அடியார்களை பொலிஸார் சோதனைக் குட்படுத்தியே ஆலய வளாகத்துக்குள் அனுமதித்து வருகின்றனர்.

பெண் பக்தர்கள் சோதனைக் கூடங்களுக்கும், ஆண்கள் வெளியிலும் உடல் சோதனைக்கு உள்படுத்தப்படுகிறனர். அத்துடன், சில நுழை வாயில்களில் பொலிஸார் ஸ்கனர் மூலம் உடல் சோதனைகளை முன்னெடுக்கின்றனர். மேலும் அடியவர்களால் எடுத்துச் செல்லப்படும் உடமைகளும் சோதனைக்கு உள்படுத்தப்படுகின்றன.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS