இலங்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, ஒரு பலவீனமான வேட்பாளர் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது. 

“நாட்டை முன்கொண்டு செல்லக் கூடிய மாற்றுத் தலைவர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கவுள்ளோம். எதிர்வரும் 18ஆம் திகதி காலிமுகத் திடலில் நடைபெறும் 'தேசிய மக்கள் சக்தி' கூட்டணியின் மாநாட்டில் யார் வேட்பாளர் என்பது அறிவிக்கப்படும்.” என்றும் மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அந்தக் கட்சியின் பேச்சாளர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “முற்போக்கான சக்திகள், கல்விமான்கள், கலைஞர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை இணைத்து ஏற்படுத்தியுள்ள 'தேசிய மக்கள் சக்தி' கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியின் சார்பில் ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லாத, வழக்குகள் இல்லாத, நாட்டை சிறப்பான முறையில் முன்கொண்டு செல்லக்கூடிய, ஊழல் குற்றச்சாட்டுக்கள் இல்லாத, மக்களுக்குத் தலைமைத்துவம் வழங்கக் கூடிய நபரே தமது வோட்பாளர்.

மகாநாயக்க தேரர் மற்றும் பிற மதத் தலைவர்களின் ஒப்புதலுடன், ஒரு நேர்மறையான அரசியல் கலாசாரத்தை அடைவதற்குத் தகுதியான வேட்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என சர்வமதத் தலைவர்கள் இணைந்து யோசனையொன்றை முன்வைத்திருந்தனர். அவர்களின் யோசனைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், அவற்றுக்கு உட்பட்ட ஒருவரையே வேட்பாளராக நியமிக்கவுள்ளோம்.

எனினும், மஹிந்த ராஜபக்ஷ முகாமினால் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. அவர்களால் அறிவிக்கப்பட்ட மிகவும் பலவீனமான வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ. எந்தவோர் அரசியல் கட்சிக்கும் நாம் ஆதரவு வழங்கப்போவதில்லை. எமது சார்பில் மாற்று வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவார். தேசிய மக்கள் சக்தி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கே ஜே.வி.பி ஆதரவு வழங்கும்.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“பொதுத் தேர்தல் முடிவுகளில் நாங்கள் (பொதுஜன பெரமுன) மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறாவிட்டாலும், அதனை பாராளுமன்றத்துக்குள் உருவாக்குவோம்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் வாக்கெடுப்பு, இன்று புதன்கிழமை மாலை 05.00 மணிக்கு நிறைவடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் 71 சதவீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது. 

உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தி நகரத்தில் உள்ள சரயு நதிக்கரையில் ராமர் கோவில் கட்டப்படும் தொடக்க விழாவை இந்திய நேரப்படி இன்று காலை 11 மணிக்குத் தொடங்கியது. ராமர் கோவில் பற்றிய பல ஆச்சர்யத் தகவல்களை வாசகர்களுக்குப் பகிர்கிறோம்.

தமிழகம் என்றில்லை; இந்தியா முழுவதுமே கொரோனா நோயாளி இறந்ததும் அவரது உடலை மூடி சீல் வைத்து நெருங்கிய ரத்த உறவுகளை கூட பார்க்க விடாமல் குழிக்குள் போட்டு மூடி விடும் நிலை காணப்படுகிறது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :