இலங்கை
Typography

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு இல்லாமல், ஜனாதிபதித் தேர்தலில் யாராலும் வெற்றிபெற முடியாது என்று அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

அநுராதபுரத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை தீர்மானிக்கும் சக்தியாக சுதந்திரக் கட்சி இருக்கும். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவோ அல்லது ஐக்கிய தேசிய கட்சியோ, எந்தக் கட்சியாக இருந்தாலும் சுதந்திரக் கட்சியின் ஆதரவு இல்லாமல் ஜனாதிபதியை தெரிவு செய்ய முடியாது. பொதுஜன பெரமுனவால், சுதந்திரக் கட்சியை கட்டுப்படுத்த முடியாது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS