இலங்கை

“இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் கலப்பு நீதிமன்ற விசாரணைக்கான கால நீடிப்பை ஐக்கிய நாடுகள் உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதுடன், இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்ல வேண்டும்.” என்று வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார். 

புதிய இராணுவத் தளபதியின் நியமனம் தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகங்களைச் சந்தித்து கருத்துக்களை வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களில் ஈடுபட்ட முக்கிய இராணுவ அதிகாரியான சவேந்திர சில்வாவிற்கு தற்போதைய கூட்டு அரசாங்கம் இராணுவத் தளபதி நியமனத்தை வழங்கியுள்ளது.

இந்த நியமனம் நாம் சர்வதேசத்திற்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் அடிபணிய மாட்டோம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் தமிழ் மக்களுக்கு இந்த அரசு துரோகம் செய்துள்ளது. இராணுவத் தளபதியின் நியமனமானது தமிழர்களுக்கு மட்டுமல்லாது, சர்வதேசத்திற்கு எதிரான போர் பிரகடனத்தை கொண்டு வரும் ஓர் நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐ.நா. அலுவலகம் தொடக்கம் பல விசாரணைகள் இடம் பெற்றிருந்தன அவ்வாறு இடம்பெற்றிருந்த விசாரணைகள் அனைத்திலும் போர்க் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டார் என இனங்காணப்பட்ட சவேந்திர சில்வாவிற்கு மைத்திரி - ரணில் அரசு இராணுவத் தளபதி நியமனத்தை வழங்கியுள்ளது. இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.” என்றுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ, நாளை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவுள்ளார். 

“பொதுத் தேர்தலில் எமக்கு மக்கள் வழங்கியிருக்கின்ற வெற்றியை முழு நாட்டிற்குமான வெற்றியாக மாற்ற நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

நேற்றிரவு துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்திறங்கிய ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று விழுந்து விபத்துகுள்ளானது.

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

மொரீஷியஸ் தீவுக்கடலில் விபத்திற்குள்ளான கப்பல் ஒன்றிருந்து கடலில் எண்ணெய் கசியத் தொடங்கியதை அடுத்து அந்நாடு அவசரகால நிலையை அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.