இலங்கை

“ஒக்டோபர் புரட்சிக்கு அனைவரும் தயாராகுங்கள். உறுதியாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன். எவரும் அச்சம் கொள்ள வேண்டாம்” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

“சாதாரண மக்களை மன்னர்களாக்கும் வகையில் எமது சமூக, அரசியல், பொருளாதார கொள்கைகளும், செயற்பாடுகளும் அமையும். ‘இலங்கைக்கு முன்னுரிமை’ என்பதை மையப்படுத்தியே எமது பயணம் அமையும். மக்களுடன் பயணிக்கும் தருணத்தில் மக்களுக்காக நடுவீதியில் உயிர்துறக்கவும் நான் தயாராகவே உள்ளேன்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக மாத்தறையில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த ஆதரவுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளதாவது, “இன்னும் சில மாதங்களில் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. எவரும் அச்சம் கொள்ள வேண்டாம். நான் உறுதியாக தேர்தலில் போட்டியிடுவேன். நாட்டை பலப்படுத்தும், அபிவிருத்தி செய்யும், தேசியப் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் வகையிலேயே எமது பயணம் அமையும்.

பெரும் தலைமைத்துவத்தை நான் நாட்டுக்காக பெற்றுக்கொடுக்க பார்க்கின்றேன். இலங்கைக்கு பெரும் தலைமைத்துவத்தை வழங்கி உலகை வெற்றிக்கொள்வோம். தேசிய பாதுகாப்பு, தேசிய பொருளாதாரம், நாட்டை ஒற்றுமைப்படுத்தும். நாட்டின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்வைக்கப்போம். அனைவருக்கும் அனைத்தும் சமமாக கிடைக்கும் நிலையை உருவாக்குவோம். சகவாழ்வு, சமாதானத்தை ஏற்படுத்தி நாட்டின் மனிதவுரிமைகளை பாதுகாப்போம். அனைவருக்கும் பேசும், அரசியல் செய்யும் உரிமையை ஏற்படுத்தியுள்ளோம். இன்று எழுந்துள்ள காலமென்பது நாட்டு மக்களின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் காலமாகும். வறுமையில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்வுப்படுத்தும் உறுதிப்படுத்தும் மாற்றத்தை ஏற்படுத்தி அவர்களின் வருமானத்தை அதிகரிப்போம்.

இலவசக் கல்வி, இலவச சுகாதாரத்தை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும். எதிர்வரும் டிசம்பர் மாதம் மக்கள் அந்த தீர்மானத்தை எடுக்கும் போது நான் இரவு, பகல் பாராது பணிகளை முன்னெடுத்து பலமான நாட்டை உருவாக்குவேன்.

இலங்கைக்கு அனைத்திலும் முன்னுரிமை என்ற அடிப்படையில் பயணிப்போம். அனைவருக்கும் பிரதிபலனைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் பொருளாதார வளர்ச்சி இருக்கும். மாடமாளிகையில் இருக்காது பாதைக்கு இறங்கி வீடு வீடாக சென்று எமது பணிகளை முன்னெடுப்போம். இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தகுதியுடைய இளைஞர் சமூகத்திற்கு தீர்மானங்கள் எடுக்கும் அதிகாரத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களை நவீனமயப்படுத்த வேண்டும்.

பொருளாதாரத்தை விரைவாக வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முதலில் ஊழலை ஒழிக்க வேண்டும். நாம் நாட்டுக்காக சாதாரண மக்களாக வாழ தயார். ஊழலுக்கு இடமளிக்க முடியாது. ஊழல்களால் தான் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியடைகிறது.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவினராகிய நாங்கள் 130க்கும் அதிகமான ஆசனங்களை வெற்றிகொள்வோம்.” என்று பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“நாட்டு மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் அக்கறையுள்ள அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் சர்வதேச விமான சேவை ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆக. 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்திருப்பதாகவும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இத்தாலி ஜெனோவா நெடுஞ்சாலையில், 2018 ஆகஸ்ட் 14 ம் ஆண்டு இடிந்து விழுந்த "மொராண்டி பாலம்" 43 உயர்களை காவு கொண்டிருந்தது.

சுவிற்சர்லாந்தின், வாட், வலாய்ஸ் மற்றும் ஜெனீவா மாநிலங்களை கொரோனா வைரஸ் தொற்று சிவப்பட்டியலிட்டு, பயணத்தை தடை செய்ய பெல்ஜியம் முடிவு செய்துள்ளது.