இலங்கை

“அரசாங்கம் பழிவாங்கும் படலத்தை மீண்டும் ஆரம்பித்திருக்கின்றது. ஆனாலும், அதற்கான பதிலை மக்கள் சீக்கிரத்தில் வழங்குவார்கள்.” என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

தலைமைத்துவ பற்றாக்குறையால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நெருக்கடி நிலைமை உக்கிரமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனுராதபுரம், ருவன்வெலிசாய விகாரையின் விஹாரதிபதியை நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.