இலங்கை
Typography

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமையால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். 

பியகமவில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ‘அவசரகாலச் சட்டம் கண்டி தலதா மாளிகை பெரஹரவை முன்னிட்டு நீடிக்கப்பட்டது. பொலிஸாரும் இது தொடர்பில் கோரிக்கை விடுத்திருந்தனர். இராணுவத்தின் ஒத்துழைப்பு அவசியம். இதனால்தான் அவசரகாலச் சட்டத்தை நாம் ஒரு மாத காலத்திற்கு நீடித்தோம். ஆனால் தற்பொழுது நாட்டின் பாதுகாப்பு நிலமையை கவனத்தில் கொள்ளும் போது நிலமை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

இதனால் அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிக்கவேண்டிய தேவை இல்லை. இதற்கு மேலதிகமாக அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுவதனால் சுற்றுலாப்பயணிகள் வருவதிலும் அழுத்தத்தை ஏற்படுத்தும். இராணுவத் தளபதி, பொலிஸ்மா அதிபர் ஆகியோருடன் நாம் கலந்துரையாடினோம். அவர்கள் அனைவரும் அவசரகாலச் சட்டத்தை நீக்குவது உசிதமானது என தெரிவித்தனர்.’ என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்