இலங்கை
Typography

‘முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஸவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தியதன் மூலம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஐக்கிய தேசிய முன்னணியின் (ஜனநாயக தேசிய முன்னணி) வெற்றியை இலகுவாக்கியுள்ளது.’ என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறியுள்ளதாவது, ‘வடக்கு, கிழக்கில் 100 வீதமான வாக்குகள் இம்முறை ஜனநாயக தேசிய முன்னணிக்கே கிடைக்கப்பெறும்; கோட்டாவை வேட்பாளராக்கியதன் மூலம் எமது வெற்றியை இவர்கள் 100 வீதம் உறுதி செய்துள்ளனர். கோட்டா மீது தமிழ் மக்கள் வைராக்கியம் கொள்ள யுத்தம் மாத்திரம் காரணமல்ல. யுத்தத்தின் பின்னரும் இவர் அந்த மக்களை வாழவிடவில்லை.

அண்மையில் நான் வடக்கிற்கு மூன்றுநாள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தேன். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டாவுக்கு எதிராக முழு வடக்கும் எழுந்துள்ளது. அவர்களுக்கு எம்முடன் பிரச்சினையிருந்தது. ஆனால், அவற்றை மறந்து ஓர் அணியில் அனைவரும் கோட்டாவுக்கு எதிராக திரண்டுள்ளனர்.

கிழக்கிலும் அவ்வாறுதான். வடக்கு, கிழக்கில் 100 வீதமான வாக்கு இம்முறை எமக்குதான் கிடைக்கும். கோட்டாவை வேட்பாளராக நியமித்ததன் மூலம் எமக்கு இலகுவாக வெற்றியடைய வழிவகுத்துள்ளனர். சிறுபான்மையினர் கோட்டாவை தோற்கடிப்பதில் உறுதியாகவுள்ளனர். அவர்களது ஆட்சிக்காலத்தில் சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்பட்டமை, படுகொலைகள், வெள்ளை வான் கடத்தல்கள், காணாமல் ஆக்கப்பட்டமை என அராஜகங்களையே அரங்கேற்றியிருந்தனர்.’ என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்