இலங்கை

நாட்டு மக்கள் தற்போது விரும்பும் ஒரே தலைவர் சஜித் பிரேமதாச மட்டுமே என்று அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். 

கேகாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் உண்மையாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என ஊடகவியலாளர் ஒருவர் வினவினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் கபீர் ஹாசிம், “இந்த கேள்விக்கு பதிலளித்தால் நிச்சயம் ஒழுக்காற்று விசாரணைக்கு முகங்கொடுக்க நேரிடும். எவ்வாறாயினும் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கட்சி இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ முடிவையும் எடுக்கவில்லை. அமைச்சர் சஜித் பிரேமதாசவையே அனைத்து மக்களும் அதிகமாக விரும்புகின்றனர். இது தொடர்பில் ஐ.தே.க உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுப்படும். நாட்டு மக்கள் கேட்கும் தலைவரை கொடுக்க வேண்டியது கட்டாயம். அதே நேரத்தில் கட்சித் தலைவரின் தீர்மானம் இறுதித் தீர்மானமாகும்.” என்றுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ, நாளை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவுள்ளார். 

“பொதுத் தேர்தலில் எமக்கு மக்கள் வழங்கியிருக்கின்ற வெற்றியை முழு நாட்டிற்குமான வெற்றியாக மாற்ற நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

நேற்றிரவு துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்திறங்கிய ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று விழுந்து விபத்துகுள்ளானது.

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.