இலங்கை

நாட்டின் மந்த வளர்ச்சிக்கு அரசியல் தரப்புகளும், மதத்தலைவர்களும், புத்திஜீவிகள் சமூகமும் ஒருங்கிணைந்து செயற்படாமையே காரணம் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

சபாநாயகர் இன்று வியாழக்கிழமை தனது டுவிட்டர் பக்க பதிவொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

“இலங்கையானது உயர்ந்த – நடுத்தர வருமானம் பெறும் நாடு என்ற மட்டத்தை அடைந்திருக்கிறது. இது சற்றே தாமதமான அடைவு என்றாலும் கூட, தெற்காசிய நாடுகளில் முதலாவதாக இம்மட்டத்திற்கு இலங்கை உயர்ந்திருக்கின்றது.

இந்நிலையில் நாட்டின் அரசியல் மற்றும் மதத்தலைவர்களும் புத்திஜீவிகளும் எவ்வாறு ஒருமித்துச் செயற்படுவது என்ற விடயத்தைக் கற்றுக்கொண்டால், எமது நாட்டின் பொருளாதாரம் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகர்வது மேலும் இலகுவானதாக இருக்கும்.” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ் கவலை வெளியிட்டுள்ளார். 

இந்து சமுத்திரம் அனைத்து நாடுகளுக்கும் திறந்த மற்றும் சுதந்திர வலயமாக அமைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கொரோனா ஊரடங்கில் 5-வது கட்ட தளர்வுகளை அறிவித்தது இந்திய அரசு. அதில் திரையரங்குகளை அக்டோபர் 15-ஆம் திகதி முதல் 50 % இருக்கைகளை பார்வையாளர்களைக் கொண்டு நிரப்பி மீண்டும் நடத்தத் தொடங்கலாம், காட்சிகளைத் திரையிடலாம் என்று அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ரஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த 19 வயது இளம்பெண், தனது தாயுடன் வயலுக்கு கடந்த 14ம் திகதி  சென்றபின்திடீரென காணாமல் போனார்.

உலகளாவிய கோவிட்-19 தொற்று இறப்புக்கள் சமீபத்தில் 10 இலட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில் இந்தப் புள்ளிவிபரம் மிகவும் எதிர்பாராததும், வேதனை மிக்க மைல்கல் என்றும் ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ கட்டரஸ் கவலை தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.