இலங்கை
Typography

இலங்கைப் பாதுகாப்புத்துறையில் போர்க்குற்றவாளிகள் என்று எவரும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

அத்தோடு, ஒருவரைப் பழிவாங்கும் நோக்கத்தில் போர்க்குற்றங்களைச் சுமத்துவதால் அவர் போர்க்குற்றவாளி என்று அர்த்தமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் இராணுவத் தளபதியாக அண்மையில் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டார். போர்க்குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒருவருக்கு பதவி வழங்கியமை தொடர்பாக நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டின் பாதுகாப்புத் துறையில் இராணுவத்தின் பங்களிப்பு அளப்பெரியது. இதனைக் கருத்திற்கொண்டே போர்க்களத்தில் திறமையாகச் செயற்பட்ட சவேந்திர சில்வாவை புதிய இராணுவத் தளபதியாக நியமித்தேன்.

சவேந்திர சில்வாவின் நியமனத்துக்கு எதிராக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் சிலர் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். திறமையான ஒருவர் பதவிக்கு வந்தால் அவருக்கு எதிராக விமர்சனங்கள் வருவது வழமையே. அவற்றை நாம் கருத்தில் எடுக்கத்தேவையில்லை.

இலங்கையின் பாதுகாப்புத் துறையில் சவேந்திர சில்வாவோ அல்லது வேறு படை அதிகாரிகளோ போர்க்குற்றவாளிகள் இல்லை. பாதுகாப்புத் துறையில் உள்ள அனைவரும் தம்மை முழுமையாக இந்த நாட்டுக்கு அர்ப்பணித்து வருகின்றனர்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்