இலங்கை
Typography

ஆட்சியமைப்பது ஓர் அரசியல் கட்சிக்கு மாத்திரம் சேவை செய்வதற்காக அல்லவென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

கம்பஹாவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அரசாங்கமொன்று அமைப்பது முழுநாட்டுக்கும் வேலை செய்வதற்காக என்றும் அரசியல் ரீதியில் எந்தவொரு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அரச அதிகாரிகள் தமக்கான கடமைகளை உரிய முறையில் முன்னெடுப்பதே, அவர்களின் பொறுப்பு என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்