இலங்கை

“வரும் தேர்தல்களில் மத்தியிலுள்ள கட்சிகளுடன் உடன்பாடுகளை செய்து பங்குதாரர் ஆகி செயற்பாட்டாலும், மாநில ஆட்சியில் சுயமாகவே நாம் இயங்குவோம்.” என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிர்வாகச் செயலாளர்கள், செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறியுள்ளதாவது, “யாரை நாம் ஆதரிக்கின்றோம் என்பது முக்கியமல்ல. அவர்களை கொண்டு எமது மக்களுக்கு எதனை சாதித்து கொடுக்கலாம் என்பதில்தான் நாம் அக்கறை செலுத்தவேண்டும்.

கடந்த காலங்களில் நாம் அரசியல் பலத்தை அதிகமாக கொண்டிருக்காது விட்டாலும் மத்தியில் அமைந்த அரசுகளுடன் நாம் கொண்டிருந்த நல்லுறவு காரணமாக எண்ணிலடங்காத சேவைகளை செய்து சாதித்தக் காட்டியிருக்கின்றோம்.

நாம் எம்மீதுள்ள நம்பிக்கையில் தான் ஒவ்வொரு செயற்பாடுகளையும் மக்களுக்கு வாக்குறுதிகளாக கொடுத்து அவற்றை பெற்றுக் கொடுத்திருக்கின்றோம். அதேபோல இம்முறையும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி முன்நிறுத்தியுள்ள வேட்பாளரை ஆதரிப்பதாக முடிவு செய்துள்ளோம்.

கடந்த காலங்களில் நாம் முன்னெடுத்த மதிநுட்ப அரசியல் நகர்வுகளால்தான் அழிவு யுத்தம் எமது மக்களை அழித்துக்கொண்டிருந்த போதும் சரி அது முடிவுக்கு வந்த பின்னரும் சரி வடக்கில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை செய்துமுடிக்க மட்டுமல்லாது பறிக்கப்படவிருந்த எமது மக்களின் பல உரிமைகளையும் தக்கவைத்துக்கொள்ள முடிந்தது. குறிப்பாக முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் தான் இவற்றில் அதிகமானவற்றை சாதித்துக் காட்டியிருந்தோம்.

அந்தவகையில் மத்தியில் யாருடன் பங்காளிகளாக நாம் இருந்தாலும் மாநிலத்தில் எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகள், அரசியல் அபிவிருத்தி உள்ளிட்ட அபிலாசைகளுக்கு தீர்வை கண்டு கொடுப்பதில் நாம் எமது தனித்துவத்துடன் தான் செயற்படுவோம். அதிலிருந்து நாம் பின்வாங்கப்போவதில்லை. மத்தியில் பங்குதாரராவதனூடாக இது ஒருபோதும் தடைப்பட்டும் போகாது என்றும் தெரிவித்த செயலாளர் நாயகம் வரவுள்ள தேர்தல்களில் நம்பிக்கையுடன் எமது மக்கள் நாம் முன்நிறுத்துபவர்களை வெற்றிபெறச் செய்து எம்மை பலப்படுத்துவார்களானால் இவற்றை சாதித்துக்காட்ட என்னால் முடியும்.” என்றுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக மக்கள் கடும் அழுத்தம் மற்றும் விரக்திநிலையின் கீழ் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்று முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுத்தும் நடவடிக்கையாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால், ரத்துச் செய்யப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவைகளை, நாளை முதல் ஆர்ம்பிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டில் பாதுகாப்பான விமான பயணம் மேற்கொள்வது தொடர்பில் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளையும் மீறி, வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளது. அதனைக் கட்டுப்படுத்தமுடியாது மத்திய அரசு தடுமாறுகிறது என காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் மெக்ஸிக்கோ நாட்டின் தலைநகர் மெக்ஸிக்கோ சிட்டியில் சர்வதேச விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் அந்நாட்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய அகழ்வாராய்ச்சியில் 3500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரிய விலங்குகளின் எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.

கொரோனா தொற்றை முன்கூட்டியே தவிர்த்து இலட்சக் கணக்கான உயிரிழப்புக்களைத் தடுக்காமல் விட்டது சீனாவின் குற்றமே என அமெரிக்காவும் இன்னும் சில சர்வதேச நாடுகளும் சீனா மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.