இலங்கை

“ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் கூட்டணி அமைப்பதற்கான வரைபு பங்காளிக் கட்சிகளால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் கூட்டணிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்.” என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

கொள்கைத் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு கூட்டணியின் வேட்பாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கூட்டணியின் தலைவராக ஐ.தே.கவின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்படுவார். ஐ.தே.கவினால் பரிந்துரைக்கப்பட்டு தலைமைத்துவ சபையினால் அங்கீகரிக்கப்படும் நபர் கூட்டணியின் செயலாளராக நியமிக்கப்படுவார். கூட்டணியின் செயலகம் சுதந்திரமான ஒரு இடமாக இருப்பதுடன் இதனை தலைமைத்துவ சபை தீர்மானிக்கும்.

தொகுதி அமைப்பாளர்களாக ஐ.தே.க அமைப்பாளர்கள் செயற்படுவார்கள். பலவீனமான தொகுதிகளில் கூட்டணியின் சார்பில் அமைப்பாளர்களை நியமிப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டிக்கிறது.

நேற்று முன்தினம் பிரதமர், அமைச்சர் சஜித் பிரேமதாச, அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஐ.தே.க தவிசாளர் அமைச்சர் கபீர் ஹாசிம், அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், ரிஷாட் பதியுதீன் ஆகியோருடன் நானும் சந்தித்து கூட்டணி ஒப்பந்தத்துக்கான வரைபை ஏகமனதாக அங்கீகரித்தோம்.

அடுத்த கட்டமாக கூட்டணிக்கான கொள்கைத்திட்டம் தயாரிக்கப்படுகிறது. இதற்கான வரைபொன்றை நான் கையளிக்கவிருக்கிறேன். இதில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக பிரதமர் குழுவொன்றை நியமித்துள்ளார்.

அக் குழுவில் என்னுடன், சம்பிக்க ரணவக்க, நிசாம் காரியப்பர், மனோ கணேசன், ரிஷாட் பதியுதீன், கபீர் ஹாசிம் மற்றும் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலைப் போன்று வெளித்தரப்பினரே கொள்கைப் பிரடகனத்தைத் தயாரிக்கிறார்கள். கூட்டணியில் 100க்கும் அதிகமான சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் 20க்கும் அதிகமான அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. சகலரும் இணங்கக் கூடியதாக வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்படும். கொள்கைத்திட்டம் மற்றும் வேலைத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டே அதற்குப் பொருத்தமான வேட்பாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும். தனிப்பட்ட நபர்கள் அவசியமல்ல வேலைத்திட்டமே அவசியமானதாகும்.

மஹிந்த ராஜபக்ஷ முகாமில் எப்பொழுதும் குடும்ப உறுப்பினர்களே வேட்பாளர்கள். எனினும் ஐ.தே.கவில் அவ்வாறான குடும்ப வேட்பாளர் எவரும் இல்லை. வெற்றி கொள்ளக்கூடிய, கொள்கைத் திட்டங்களை அடிப்படையாகக் கொண்ட ஒருவர் நியமிக்கப்படுவார். அவசரப்பட்டு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பலருக்கு தற்பொழுது காற்றுப்போயுள்ளது. எனினும் நாம் எவ்வித அவசரமும் இன்றி வேட்பாளரை அறிவிப்போம்.” என்றுள்ளார்.

“விமர்சனங்கள் எல்லாவற்றுக்கும் நாம் பதிலளித்துக்கொண்டிருக்க முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒற்றுமை மிக அவசியம். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள எம்.ஏசுமந்திரனின் சிங்கள நேர்காணல் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி ஆராயும்.” என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

“நாம் மிகவும் மதிக்கும் ஒரே சொத்து மனித அபிவிருத்தி என்பதால் எத்தகைய சிரமங்களை நாம் எதிர்கொண்டாலும் ´மக்களே முதன்மையானவர்கள்´ என்ற எமது கொள்கையில் சமரசம் செய்ய முடியாது” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

புலம்பெயர் தொழிலாளர்களின் அவலங்களுக்காக இணையவழியில் போராட்டம் நடத்துவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்  திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக மத்திய அரசு அறிவித்திருந்த ஊரடங்கு உத்தரவினால் கொரோனா வைரஸ் சமூகத் தொற்று குறைந்தது எனக் கூறப்பட்டாலும், மிகப்பெரிய சமூகப் பிரச்சனையாக எழுந்தது புலம் பெயர் தொழிலாளர்களின், சொந்தமாநிலங்களுக்கான நகர்வுகள்.

ரஷ்யாவின் மேற்பகுதியில் ஆர்க்டிக் துருவத்துக்கு கீழே அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய சைபீரிய சமவெளி மற்றும் அதன் காடுகளில் முக்கியமாக கட்டாங்கா என்ற பகுதியில் மிகவும் தீவிரமாக கடந்த சில நாட்களாகக் காட்டுத் தீ பரவி வருகின்றது.

புதன்கிழமை விண்ணில் உள்ள ISS எனப்படும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு நாசாவின் இரு வீரர்களை ஏந்தியவாறு SpaceX நிறுவனத்தின் Falcon 9 ராக்கெட்டின் மூலம் Crew Dragon என்ற அதிநவீன விண் ஓடம் செலுத்தப் படவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் கால நிலை சீர்கேட்டால் இதன் பயணம் சனிக்கிழமை ஒத்திப் போடப் பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.