இலங்கை

“நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குவதாக இருந்தால் அதுதொடர்பில் அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடியே மேற்கொள்ளவேண்டும். மாறாக பின்வழியால் அதனை மேற்கொள்ள இடமளிக்கமாட்டோம்.” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குவது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் இடம்பெற்றுள்ள பேச்சுவார்த்தை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.