இலங்கை
Typography

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக விசாரணை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில், மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகத்தை நிர்மாணிக்கும் போது, அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, அவர் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த வழக்கு, இன்று வெள்ளிக்கிழமை மீளவும் அழைக்கப்பட்டபோதே, நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்