இலங்கை
Typography

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமாகிய இன்று (வெள்ளிக்கிழமை காலை) காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் உரிய நீதியை இலங்கை அரசு வழங்க வேண்டுமென வலியுறுத்தி, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஓமந்தையில் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். 

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா- பன்றிக்கெய்தகுளம் பிள்ளையார் ஆலயத்தில் காலை 10.30 மணிக்கு தேங்காய் உடைத்து வணங்கிய பின்னர், ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமாகிய பேரணி ஓமந்தை இறம்பைக்குளம் வரை சென்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘அரசு நீதியை தர வேண்டும் ஓ.எம்.பி வேண்டாம்’, ‘இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட உறவுகள் எங்கே’ எனவும் கோசங்களை எழுப்பினர்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சி.சிறிதரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சத்தியலிங்கம், தியாகராஜா, இந்திரராஜா, தமிழ் மக்கள் கூட்டணியை சேர்ந்தவர்கள் உட்பட பல அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இதனிடையே, மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று மன்னாரில் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்டச் செயலகத் திற்கு முன்னால் குறித்த போராட்டம் நடைபெற்றது.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்கள், குறித்து அரசாங்கம் உரிய பதிலை இன்னும் வழங்கவில்லை.

இந்நிலையில் இந்த நல்லாட்சி அரசாங்கம் நிறைவடைவதற்குள், சர்வதேசத்தின் தலையீட்டுடன் நல்ல தீர்வு ஒன்றை வழங்க கோரியும் பல வருடங்களாக சந்தேகத்தின் பெயரில் அரசியல் கைதிகளாக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை விடுவிக்க கோரியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்