இலங்கை

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இருக்கும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

“ஜனாதிபதித் தேர்தலில் எமது ஆதரவில்லாது, முடிந்தால் 47 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக்காட்டுமாறு ஏனைய கட்சிகளுக்கு சவால்விடுகின்றோம். பொதுத் தேர்தலில் 130 ஆசனங்கள் வரை சுதந்திரக் கட்சியே கைப்பற்றும். அதன் அடிப்படையில்தான் 2020இல் எமது அரசாங்கம் அமையுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளார்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பிலுள்ள சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சுதந்திரக் கட்சியின் 68வது மாநாடு வெற்றிகரமாக நடந்துமுடிந்துள்ளது. எமது கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டுள்ளோம். நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லும் தெளிவான வேலைத்திட்டத்தை அதில் முன்வைத்துள்ளோம். எமக்கு தனி நபர்கள் முக்கியமல்ல. நாட்டை வெற்றிக்கொள்ளும் வேலைத்திட்டமே முக்கியம். நிலை பேண்தகு அபிவிருத்தி, வீடமைப்பு, சுகாதாரம், கல்வி, போக்குவரத்து உட்பட அனைத்து விடயங்கள் தொடர்பிலும் தெளிவான கொள்கைக் பிரடனகத்தை வெளியிட்டுள்ளோம். இவற்றை தான் தேர்தலில் மக்களிடம் கொண்டுசேர்க்கவுள்ளோம்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் நாம் தான் தீர்மானிக்கும் சக்தி. எந்தவொரு கட்சியாலும் 47 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாது. அப்படி எவரும் 47 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற முடியுமென்றால் பெற்றுக்காட்டுமாறு சவால் விடுகின்றோம். பொதுஜன பெரமுனவுடன் பேச்சுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அடுத்தகட்ட நகர்வுகள் பேச்சுவார்த்தையில் எட்டப்படும் முடிவுகளின் அடிப்படையில் இடம்பெறும்.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் மீண்டும் ஒரு முறை பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடையே பரவும் புதிய வகை வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாகவும், இதுவும் கொரோனா போன்று பரவக் கூடும் என்றும் சமீபத்தில் ஊடங்களிடையே பரபரப்புச் செய்தி வெளியாகி இருந்தது.

3 மாதத்துக்கும் அதிகமான கடுமையான லாக்டவுன் காலத்தை அடுத்து இங்கிலாந்தில் இன்று சனிக்கிழமை முதற்கொண்டு பப்களும், உணவு விடுதிகளும் திறப்பதற்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது.