இலங்கை

காணாமல் போனவர்கள் தொடர்பான சான்றிதழை கொண்டுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு மாதாந்தம் 6,000 ரூபா கொடுப்பனவை வழங்கஅரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இது தொடர்பாக நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

காணாமல் போனமை குறித்து உறுதிசெய்யப்பட்ட காணாமற் போனவர்களுக்காக இடைக்கால நிவாரணத்தை வழங்குதல் என்ற தலைப்பில் இது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்கள் தொடர்பான சான்றிதழை கொண்டுள்ள பயனாளிகளுக்காக 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு மாதமும் 10வது தினத்தன்று நேரடியாக பணத்தை வைப்பீடு செய்வதன் மூலம் மாதாந்தம் 6,000 ரூபா இடைக்கால நிவாரணத்தை வழங்கமுடியும்.

காணாமல் போன நபர் தொடர்பான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கையை கவனத்தில் கொண்டு அழுத்தத்திற்கு உள்ளான குடும்பங்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களுக்காக காணாமல் போனோர் தொடர்பான சான்றிதழை வழங்குமாறு பதிவாளரின் திணைக்களத்திற்கு உத்தரவை பிறப்பிப்பதற்காக நிதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழி சமூக மேம்பாடு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர்கள் கூட்டாக சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் தற்போது (இன்று சனிக்கிழமை) உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது. 

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், செல்வச் சந்நிதி முருகன் ஆலய முன்றலில் நாளை சனிக்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

இந்தியாவில் வேளாண் மசோதாக்களுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வருகிறது.

இந்தியத் திரைவானில் சுமார் 40 ஆயிரம் பாடல்களைப் பாடிய சாதனைச் சொந்தக்காரர் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அமைதியுற்றார்.

சுவிற்சர்லாந்து தலைநகர் பேர்ன் நாடாளுமன்றித்தின் முன்னதாக அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் வாரத் தொடக்கத்தில் "மாற்றத்திற்கான எழுச்சி" இன் ஆர்வலர்கள் உருவாக்கிய "காலநிலை முகாம்" வெளியேற்றப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, நேற்று வெள்ளி மாலை ஹெல்வெட்டியா பிளாட்ஸில் கூடினர்.

ஒரு பயனுள்ள தடுப்பூசி பரவலாகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் உலகளாவிய கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை இரண்டு மில்லியனை எட்டக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.