இலங்கை
Typography

ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிப்பதே தமது பிரதான நோக்கம் என்று எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று புதன்கிழமை ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தினேஷ் குணவர்த்தன மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது சுயாதீனமானதொரு கட்சியாகும். அவர்கள் எம்முடன் தொடர்ச்சியாக பேச்சுக்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் எமது இரண்டு தரப்பினரதும் ஒரே இலக்காக இருக்கிறது. எவ்வாறாயினும், நாட்டின் அடுத்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கமொன்றுதான் ஸ்தாபிக்கப்படும். நாம் நிச்சயமாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவோம். எனவே, தற்போது ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாக இருக்கிறது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்