இலங்கை

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி அரங்கேற்றிய அரசியல் சூழ்ச்சியால் பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் இல்லாமல் போனது. இதன்மூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் புதிய அரசியலமைப்பு நிறைவேறும் சந்தர்ப்பத்தை ஜனாதிபதி தடுத்துவிட்டார்.” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

வடமராட்சியில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மாவை சேனாதிராஜா மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இலங்கையில் முதன்முறையாக பாராளுமன்றத்தின் ஊடாக இனப்பிரச்சினை தீர்க்கப்படுவதை மையமாகக்கொண்டு – நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்பதை மையமாகக்கொண்டு ஒரு புதிய அரசியமைப்பை உருவாக்குவதற்குப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முஸ்லிம், மலையகத் தமிழ்க் கட்சிகள் ஆகியவற்றின் ஆதரவுடன் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

புதிய அரசியலமைப்பின் ஊடாக எங்களுக்கு நீதி, நியாயம் கிடைக்க வேண்டும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும், போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் மீளக்கட்டியெழுப்பப்பட வேண்டும் என எமது பரிந்துரைகளை அந்த இடைக்கால அறிக்கையில் நாம் முன்வைத்திருந்தோம்.

அவ்வேளையில், புதிய அரசியலமைப்புக்கு எதிராக – இடைக்கால அறிக்கைக்கு எதிராக மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியினரும், சில பிக்குகள் உள்ளிட்ட இனவாதிகளும் போர்க்கொடி தூக்கினார்கள். புதிய அரசமைப்பு ஊடாக நாடு பிளவுபடப் போகின்றது என்று தென்னிலங்கையில் மிகத் தீவிரமான பரப்புரைகளை அவர்கள் முன்னெடுத்தார்கள்.

அவர்களின் பரப்புரைகளுக்கு மறைமுகமாக ஆதரவு வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி அரசியல் சூழ்ச்சியை ஏற்படுத்தினார். மஹிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமித்தார்.

தமிழ் மக்களின் அமோக வாக்குகளால் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால, இறுதியில் எங்களுடன் கலந்து பேசாமல் பாராளுமன்றத்தையும் கலைத்தார்.

ஜனாதிபதியின் இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நாங்கள் உயர்நீதிமன்றம் சென்றோம்; அங்கு வாதாடினோம். ஜனாதிபதி அரசியல் சூழ்ச்சியை ஏற்படுத்தி பாராளுமன்றத்தைக் கலைத்தது தவறு என்று சுட்டிக்காட்டினோம். அதன்பிராகாரம் உயர்நீதிமன்றில் எமக்கு நீதி கிடைத்தது.

மீண்டும் பாராளுமன்றம் கூடியது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சியமைத்தது. ஆனால், பாராளுமன்றில் அரசுக்கு வழங்கியிருந்த தன்னுடைய ஆதரவை – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவை ஜனாதிபதி மைத்திரி திருப்பப் பெற்றார்.

இதனால் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தை இழக்க வேண்டியிருந்தது. இதன்மூலம் புதிய அரசியலமைப்பு நிறைவேறும் சந்தர்ப்பத்தை ஜனாதிபதி மைத்திரி தடுத்துவிட்டார் – தோற்கடித்துவிட்டார். புதிய அரசியலமைப்பை நிறைவேறுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் மிகவும் அவசியமானது.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“மதகுருமாரையும், அடிப்படைவாதிகளையும், தீவிரவாதிகளையும் இணைத்துக் கொண்டு அரசியலமைப்பினைத் தயாரித்த நாடுகளுக்கு நேர்ந்த கதியை நாம் மறந்து செயற்படக் கூடாது.” என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கான பிரதிநிதிகளின் சிபார்சுகளை வழங்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியுள்ளார். 

இந்திய மத்திய மந்திரிசபை நவம்பர் மாதம் வரை ஏழைமக்களுக்கு இலவச அரிசி மற்றும் பருப்பு வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் போலீசார் விசாரணையில் உயிரிழந்த தந்தை-மகன் சம்பவத்தையடுத்து தமிழ்நாட்டில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினருக்கு அரசு தடை விதித்துள்ளது.

கொரோனா வைரசின் கடும் பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றான இத்தாலியில், தலையொட்டிப்பிறந்த இரட்டையர்களை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பிரித்து, மருத்துவ உலகில் மகத்தான சாதனை புரிந்துள்ளார்கள் இத்தாலிய மருத்துவர்கள்.

சுவிற்சர்லாந்தின் மாநிலங்கள் சில இன்று வியாழக்கிழமை முதல் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்துகின்றன.