இலங்கை

தமிழர் தாயகப் பகுதியான வடக்கு- கிழக்கில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பௌத்தர்களின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை குற்றஞ்சாட்டியுள்ளது. 

தமிழ் மக்கள் பேரவை இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நிகழ்த்திய அகந்தையோடு சிங்கள பௌத்த விரிவாக்கமானது முன்னெப்போதும் இல்லாதளவில் முன்னெடுக்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ நிலைகளை அதிகரித்தல், அதனைச் சுற்றி பௌத்த விகாரைகளையும் சிங்களக் குடியேற்றங்களையும் நிறுவுதல் உட்பட தமிழர்களின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பண்பாட்டு மையங்களை இல்லாமலாக்கும் செயற்பாடுகள் வனபரிபாலனத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் போன்றவற்றின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்த விரிவாக்கத்தை நிலைநிறுத்த ஏதாவது கிராமங்களில் ஒரு சிங்களவரோ அல்லது பௌத்த விகாரையோ இருப்பின் அதனை தமிழ்ச் சிங்கள கிராமங்கள் என அடையாளப்படுத்தும் செயற்பாடுகளும் ஆதிக்கச் சட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழ் மண் சிதைவுற்றுள்ளதோடு, தமிழரின் குடித்தொகை வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் இருந்து கிழக்கு பிரித்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, தோற்கடிக்கப்பட்ட மக்கள் என்ற மனநிலையுடன் தமிழ் மண் அரசியற் சகதிக்குள் மூழ்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக மக்கள் கடும் அழுத்தம் மற்றும் விரக்திநிலையின் கீழ் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்று முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுத்தும் நடவடிக்கையாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால், ரத்துச் செய்யப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவைகளை, நாளை முதல் ஆர்ம்பிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டில் பாதுகாப்பான விமான பயணம் மேற்கொள்வது தொடர்பில் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளையும் மீறி, வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளது. அதனைக் கட்டுப்படுத்தமுடியாது மத்திய அரசு தடுமாறுகிறது என காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் மெக்ஸிக்கோ நாட்டின் தலைநகர் மெக்ஸிக்கோ சிட்டியில் சர்வதேச விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் அந்நாட்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய அகழ்வாராய்ச்சியில் 3500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரிய விலங்குகளின் எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.

கொரோனா தொற்றை முன்கூட்டியே தவிர்த்து இலட்சக் கணக்கான உயிரிழப்புக்களைத் தடுக்காமல் விட்டது சீனாவின் குற்றமே என அமெரிக்காவும் இன்னும் சில சர்வதேச நாடுகளும் சீனா மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.