இலங்கை

தேசியத் தலைவர்கள் எனக் கூறி கொள்வோர், தென்னிலங்கை சிங்கள மக்களைத் தவறாக வழி நடத்தி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தின் 75வது ஆண்டு நிறைவு விழா மற்றும் முஸ்லிம் சமூகத்தின் மூத்த தலைவர் ராஸிக் பரீத் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுதி நூல் வெளியீட்டுவிழா நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு சிறப்புரையாற்றும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சிறுபான்மைச் சமூகங்களைத் தொடர்ந்து புறக்கணிப்பதன் மூலம் நாட்டை மீண்டும் அழிவுக்குள் தள்ளிவிடும் அச்சுறுத்தலே காணப்படுகிறது.

போலித்தனமான தேசியவாதிகளால் நாடு பேராபத்துக்குள்ளே தள்ளப்படும். சுதந்திரமடைந்து 70 வருடங்களைக் கடந்த நிலையிலும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க தேசிய அரசியல் கட்சிகள் தவறிவிட்டன. தென்னிலங்கையின் தேசியத் தலைவர்கள் எனக் கூறிக்கொள்வோர், பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவை தமது சுயநல அரசியலுக்காக பெற்றுக்கொள்வதிலே குறியாக இருக்கின்றனர்.

தங்களை தேசியவாதிகள் எனக் கொள்பவர்கள் பக்கச்சார்பாகவும், சிறுபான்மைச் சமூகங்களை ஏமாற்றுபவர்களாகவுமே செயற்படுகின்றனர். நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளைக் கடந்துள்ளது.” என்றுள்ளார்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீடுகளில் நிகழும் உயிரிழப்புக்களைத் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

மஹர சிறைச்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வன்முறையை அடுத்து தமது வைத்தியசாலைக்கு 6 சடலங்கள் எடுத்து வரப்பட்டதாக ராகம வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. 

மீண்டும் வங்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுபகுதியால் தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் டெல்லியை நோக்கி விவசாயிகள் 2வது நாளாக பேரணி மேற்கொண்டுள்ளனர். இதனால் டெல்லியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தாலியின் சுகாதார அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கிய சோதனை தரவுகளின் படி, கடந்த 14 நாட்களில் நாடு முழுவதும் , கோவிட் -19 வைரஸ் தொற்று வீதம் குறைந்திருப்பதனால், மூன்று சிவப்பு மண்டலங்கள் மற்றும் இரண்டு ஆரஞ்சு மண்டலங்களில் இந்த வார இறுதியில் அதாவது இன்று ஞாயிறு முதல் பாதுகாப்பு விதிகள் தளர்த்தப்படும்.

சுவிற்சர்லாந்தில் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என்று சுவிஸ் சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் தெரிவித்துள்ளார். சென்ற வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில், பெர்செட் இதனைத் தெரிவித்துள்ளார்.