இலங்கை

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வேட்பாளர் ஒருவரை களமிறக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இதனை அறிவித்துள்ளார்.

கட்சி மத்திய செயற்குழுக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதற்கமையவே ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவார் என கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நேற்று வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்புகள் எவையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.