இலங்கை

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து முறுகல் நிலை காணப்பட்டுவரும் நிலையில், இறுதி இணக்கப்பாடொன்றை எட்டும் பொருட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்குமிடையில் நாளை ஞாயிற்றுக்கிழமை முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் நாளை தனியாக நேருக்கு நேர் சந்திக்க விருக்கின்றனர்.

அலரி மாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் தலைமையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய சந்திப்பில் அமைச்சர்கள் மலிக் சமரவிக்ரம, கபீர் ஹாஷிம், ஜோன் அமரதுங்க, ஜயவிக்ரம பெரேரா, ரவி கருணாநாயக்க, அகில விராஜ் காரியவசம், லக்ஷ்மன் கிரியெல்ல, வஜிர அபேவர்தன உட்பட மற்றும் சிலர் கலந்து கொண்டனர். ஆரம்பத்தில் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கக் கோரும் 54 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பக் கடிதம் குறித்துப் பேசப்பட்டபோது, கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தங்களது விருப்பத்தைக் கோரும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. அதனை நான் மறுக்கப் போவதில்லை. ஆனால் கட்சி யாப்புக்கமைய கட்சி செயற்குழுக் கூட்டத்திலும், பாராளுமன்றக் குழுக் கூட்டத்திலும் பேசியே வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இங்கு சஜித் பிரேமதாசவை நாட்டு மக்கள் கேட்கின்றனர். மக்கள் எதிர்பார்ப்பவரையே கட்சி வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று கபீர் ஹாஷிமும், மலிக் சமரவிக்கிரமவும் வலியுறுத்திக் கூறியுள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தில் கபீர் ஹாஷிமுக்கும் லக்ஷ்மன் கிரியெல்லவுக்குமிடையே சிறிய வாய் தர்க்கம் இடம்பெற்றுள்ளது.

அதனை பிரதமர் தலையிட்டு இருவரையும் அமைதிப்படுத்தியுள்ளார். கட்சியின் வேட்பாளர் தெரிவு தாமதப்படுத்தப்படுவது ஆரோக்கியமான தல்லவென இங்கு பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். கட்சியின் வேட்பாளர் பட்டியலில் ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச ஆகிய மூவரதும் பெயர்கள் காணப்படும் நிலையில் சஜித் தரப்பினர் நாடு பூராவும் மக்களாதரவைத் திரட்டும் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். கட்சியின் அங்கீகாரமின்றி தன்னிச்சையாக கூட்டங்கள் நடத்தப்படுவதை கட்சியின் உயர்மட்டம் கடுமையாக கண்டித்துள்ளனர்.

கட்சித் தலைமைக்கோ மத்திய குழுவுக்கோ அறிவித்து அனுமதி பெறாமல் கூட்டங்கள் நடத்தப்படுவதன் மூலம் கட்சியின் நற்பெயருக்கு களங்கமேற்படுத்தும் செயலென இங்கு அமைச்சர் ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். வேட்பாளர் யாரென கட்சியால் அறிவிக்கப்படாத நிலையில் தான் வேட்பாளர் என்று சஜித் அறிவித்து வருவதை கட்சியில் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகின்ற நிலையில் திங்கட்கிழமைக்குள் கட்சியின் முடிவு அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்க்கப்படுகின்றது என்பதை இங்கு பலரும் சுட்டிக்காட்டி அவசரமாக முடிவெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை ஞாயிற்றுக்கிழமை சஜித் பிரேமதாசவை தனித்து நேருக்கு நேராக பேசி முடிவெடுப்பதற்கு இணக்கம் தெரிவித்திருக்கின்றார். இதேவேளை இன்று சனிக்கிழமை காலை ஜனநாயக தேசிய கூட்டணியில் இணையும் கட்சிகளின் தலைவர்களும் பிரதமரைச் சந்தித்துப் பேசவிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“மதகுருமாரையும், அடிப்படைவாதிகளையும், தீவிரவாதிகளையும் இணைத்துக் கொண்டு அரசியலமைப்பினைத் தயாரித்த நாடுகளுக்கு நேர்ந்த கதியை நாம் மறந்து செயற்படக் கூடாது.” என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கான பிரதிநிதிகளின் சிபார்சுகளை வழங்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியுள்ளார். 

இந்திய மத்திய மந்திரிசபை நவம்பர் மாதம் வரை ஏழைமக்களுக்கு இலவச அரிசி மற்றும் பருப்பு வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் போலீசார் விசாரணையில் உயிரிழந்த தந்தை-மகன் சம்பவத்தையடுத்து தமிழ்நாட்டில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினருக்கு அரசு தடை விதித்துள்ளது.

கொரோனா வைரசின் கடும் பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றான இத்தாலியில், தலையொட்டிப்பிறந்த இரட்டையர்களை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பிரித்து, மருத்துவ உலகில் மகத்தான சாதனை புரிந்துள்ளார்கள் இத்தாலிய மருத்துவர்கள்.

சுவிற்சர்லாந்தின் மாநிலங்கள் சில இன்று வியாழக்கிழமை முதல் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்துகின்றன.