இலங்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதாக இதுவரை 12 அரசியல் கட்சிகளும், 2 சுயேட்சைகளும் தேர்தல்கள் ஆணையாளரான மஹிந்த தேசப்பிரியவுக்கு அறிவித்துள்ளன. 

அதில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளடங்குவதாகவும், இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயேட்சைகளாக போட்டியிடப்போவதாக தமக்கு அறிவித்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த தேசப்பிரிய மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான கட்சிகள், சுயேட்சைகளின் எழுத்து மூல ஆவணங்களை பெற்றுக் கொண்ட போதும், வேட்புமனுவுக்குரிய காலம் அறிவிக்கப்பட்டதன் பின்னரே அவற்றுக்குரிய விண்ணப்பப்படிவங்கள் விநியோகிக்கப்படும்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அரசியல் கட்சிகளிடம் விடுக்கப்பட்ட வேண்டு கோள்களுக்கிணங்கவே கட்சிகளும் சுயேட்சைகளும் எனக்கு அறிவித்துள்ளன.

இதேவேளை, உலக ஜனநாயக தினமான செப்டம்பர் 15ஆம் திகதி முக்கியமான அறிவித்தலொன்றை வெளியிடவுள்ளோம். எதிர்வரும் 9ஆம் திகதி திங்கட்கிழமை ஆணைக்குழுவின் முக்கிய கூட்டம் இடம்பெறவிருக்கின்றது. இக்கூட்டம் வாராந்தக் குழுக் கூட்டமாக உள்ளபோதும் ஜனாதிபதி தேர்தலுக்கான காலம் நெருங்கியுள்ளதால் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக இது அமையலாம்.

இக்குழுக்கூட்டத்தின் போது பெரும்பாலும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக் கோரும் திகதியும், தேர்தல் நடத்தப்படக்கூடிய திகதியும் தீர்மானிக்கப்படலாம். எவ்வாறாக இருந்தபோதும் ஜனாதிபதி தேர்தல் குறித்த உத்தியோகபூர்வமான அறிவிப்பு இம்மாதம் 15ஆம் திகதிக்குப் பின்னரே இடம்பெறும்.

15ஆம் திகதி வெளியிடவிருக்கும் அறிக்கை ஜனாதிபதி தேர்தலோடு தொடர்புபட்ட அறிக்கையல்ல. ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையாகும். எந்தவொரு தேர்தல் குறித்தும் வேட்புமனு திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தக்கூடாது. கூட்டங்கள் தேர்தலோடு தொடர்புபட்ட விடயங்களுக்கு அவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையிலேயே அந்த அறிவிப்பு அமையும்.” என்றுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ, நாளை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவுள்ளார். 

“பொதுத் தேர்தலில் எமக்கு மக்கள் வழங்கியிருக்கின்ற வெற்றியை முழு நாட்டிற்குமான வெற்றியாக மாற்ற நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

நேற்றிரவு துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்திறங்கிய ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று விழுந்து விபத்துகுள்ளானது.

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

மொரீஷியஸ் தீவுக்கடலில் விபத்திற்குள்ளான கப்பல் ஒன்றிருந்து கடலில் எண்ணெய் கசியத் தொடங்கியதை அடுத்து அந்நாடு அவசரகால நிலையை அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.