இலங்கை
Typography

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான மாநகர மண்டபத்தை அமைப்பதற்கான அடிக்கல்லைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் (இன்று சனிக்கிழமை) நாட்டி வைத்தார். 

யாழ்ப்பாணம் மாநகர முன்னாள் மண்டபம் அமைந்திருந்த வளாகத்தில் புதிய மண்டபம் 2,350 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்படவுள்ளது.

பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சபிக்க ரணமாக்கத் தலைமையில் இன்று முற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு போர் காரணமாக 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் அழிவடைந்த யாழ்ப்பாண மாநகர சபையின் நிரந்தர மண்டபத்தை மீளவும் புதிதாக நிர்மாணிப்பதற்கான நிதி நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்டது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்