இலங்கை
Typography

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாடு வெளிநாட்டுச் சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அவிசாவளையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நாடு தற்போது பல்வேறு வெளிநாட்டு சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது. நாம் அவற்றிலிருந்து விடுவித்து எமது நாட்டை பொருளாதார கேந்திர நிலையமாக மாற்றுவோம். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரம் கட்டமைக்கப்படும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்